உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காய்கறி விற்பனைக்கு அனுமதி மறுப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

 காய்கறி விற்பனைக்கு அனுமதி மறுப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர்: விருதுநகர் கல்லுாரி ரோட்டில் உள்ள நகராட்சி மைதானத்தில் காய்கறிகள் விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விருதுநகர் தலைமை தபால் அலுவலகம் அருகே காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனால் போலீசார் விற்பனை செய்வதை தடுத்தனர், மாற்று இடமாக நகராட்சி மைதானத்தில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது மைதானத்தில் காய்கறிகளை விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால் நேற்று நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., யோகேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்