மேலும் செய்திகள்
பி.கே.ஆர்., மகளிர் கல்லுாரி நிறுவனர் தின விழா
29-Aug-2025
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி நிறுவனரும் கே.ஆர்.குழுமங்களின் தலைவருமான கே .ராமசாமி பிறந்த தின விழா நடந்தது. கல்லுாரி வளாகத்தில் அவரது உருவ சிலைக்கு நிர்வாக குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆதரவற்றோர் இல்லங்கள் ஆசிரமங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நடமாடும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடந்தன. விவசாயிகளுக்கு நவீன விதை விதைப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனை,ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது. கல்லுாரியில் நடந்த விழாவில் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் ஆர்.அசோக் பேசினார். விசாகப்பட்டினம் ராஸ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் எக்கு ஆலையின் துணை பொதுமேலாளர்.சி. அசோகன் 18 மாணவர்களுக்கு கே.ஆர்.ராமசாமி நினைவு கல்வி ஆணைகள் வழங்கினார். விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர்கள் பேராசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
29-Aug-2025