தேசிய துாய்மை பணியாளர் ஆணைய ஆய்வுக் கூட்டம்
சிவகாசி: தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் சார்பில் சிவகாசியில் அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், துாய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறியும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். எஸ்.பி., கண்ணன் முன்னிலை வகித்தார். தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் துாய்மை பணியாளர்கள் நலன் குறித்து, அதன் தொடர்புடைய அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். தொடர்ந்து துாய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக சிவகாசியில் உள்ள துாய்மை பணியாளர்கள் குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சப்கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், மண்டல இயக்குனர் நகராட்சி நிர்வாகம் விஜயலட்சுமி, மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.