உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை: விவசாயிகளுக்கு நஷ்டம்

அதிகாரிகள் கண்காணிப்பு இல்லை: விவசாயிகளுக்கு நஷ்டம்

ராஜபாளையம் : மாற்று பயிர்களில் ஈடுபடும் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு அதிகாரிகளின் தகுந்த வழிகாட்டுதல் இல்லாததால் நஷ்டத்தில் தவிக்கின்றனர். பெயரளவிற்கு இன்றி முறையான அரசின் உதவிகளை பெற்றுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோருக்கு நேரடியாக வேலை வாய்ப்பினை தந்து வரும் தொழிலாக இருப்பினும் இவற்றில் ஏற்படும் சவால்கள் அதிகம்.இதற்கு கை கொடுத்து உண்மையான இவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு அளிக்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.அவை உரம், உழவு, ஆலோசனைகள், ஆராய்ச்சி, சலுகைகள், இழப்பீடு என தொடர்கிறது. இவற்றை கண்காணிக்க அரசு வேளாண் மற்றும் விவசாய துறை மூலம் அலுவலர்களை இயக்கி வருகிறது.இந்நிலையில் பல்வேறு இன்னல்களிலும் மாற்றுப் பயிர் விவசாயம் மூலம் ஈடுபட்டும் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாததால் தெற்கு வெங்காநல்லுார் விவசாயி குமரேசன் பாதிப்படைந்து உள்ளார்.இதுகுறித்து விவசாயி குமரேசன், கடந்த 40 வருடங்களாக 13 ஏக்கரில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஒரே பயிர்களால் ஏற்படும் சிக்கலை தவிர்க்க கரும்பு, மிளகாய், மல்லி, கொடி பாவக்காய், கத்தரி, பப்பாளி, முருங்கை என பல்வேறு பயிர்களை சாகுபடி செய்தும் தொடர் லாபம் என்பது காண முடிவது இல்லை.இதற்கு முக்கிய காரணம் சம்பந்தப்பட்ட அலுவலர் விவசாய நிலத்திற்கு வருகை தந்து பயிருக்கான வழிகாட்டுதலோ, அரசின் கடன் உதவி திட்டங்களையோ, நோய் தாக்குதலின் போது தகுந்த மருந்துகள் குறித்தோ பரிந்துரை புரிவது இல்லை.தற்போது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ரூ.3 லட்சம் செலவில் கண்வலிக் கிழங்கு பயிரிட்டுள்ளேன். மழை பாதிப்பால் 10 சதவீதம் மட்டும் சாகுபடி கிடைத்து இதனால் ரூ.6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேறு தொழில்கள் தெரியாததால் தொடர் முயற்சியில் ஈடுபடுகிறேன். இயற்கை இடர்பாடுகள் பாதிப்புகளை தாங்கும் சக்தி இல்லை.வேளாண் அலுவலர்கள் நேரடியாக சாகுபடி பகுதிக்கு வருகைதந்து துறை வல்லுனர்களின் வழிகாட்டுதல்களை வழங்கி கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை