உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாட்டு கொட்டகையாக மாறும் பழைய பஸ் ஸ்டாண்ட்

மாட்டு கொட்டகையாக மாறும் பழைய பஸ் ஸ்டாண்ட்

அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித் திரிவதால் மாட்டு கொட்டகையாக மாறி உள்ளது.அருப்புக்கோட்டை நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உட்பட ஊர்களுக்கு பஸ்கள் செல்கிறது. அனைத்து கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து தான் செல்லும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வர். நகரில் சுற்றித் திரியும் மாடுகள் இரவு நேரங்களில் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேருகின்றன. வசதியாக ஆங்காங்கு படுத்து அசை போடுகின்றன.கூட்டமாகத் திரியும் மாடுகளின் எண்ணிக்கையை விட பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வர பயணிகள் பயப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் முழுவதும் மாடுகளின் சாணம் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை