உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்பு

 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்பு

விருதுநகர்: விருதுநகரில் ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது. உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர். மாநில அமைப்பு செயலாளர் முத்தையா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட செயலாளர் செல்வகணேசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முருகையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிர்வாகி கந்தசாமி நன்றி கூறினார். பல்வேறு ஆசிரியர், அரசுத் துறைச் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ