உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர்:தென் மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தீபாவளி பண்டிகை அக். 31ல் கொண்டாடப்பட உள்ளது. ஜூலை 1ல் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு அனைத்து ரயில்களிலும் துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விட்டன. காத்திருப்போர் பட்டியலும் நீண்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி வியாழக்கிழமை வருவதால் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமையும் விடுப்பு எடுத்து குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். எனவே தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்பே மதியம், இரவு நேரங்களில் சென்னை, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களையும், முன் பதிவு இல்லாத சேர் கார் வசதி கொண்ட ரயில்களையும் போதிய அளவில் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.2023ல் நாகர்கோவில் - சென்னை சென்டரலுக்கு கரீப் ரத் ரயில் இயக்கப்பட்டது. அதே போல் திருநெல்வேலி - விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை வழியாக ஒரு ரயிலும், துாத்துக்குடி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா ரயிலும் இயக்கப்பட்டது. ஒரு வாரம் முன்பு ஆயுத பூஜைக்கு செங்கல்பட்டு - திருநெல்வேலி ரயில் இயக்கியது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் காலதாமதம் இல்லாமல் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட வேண்டும்.தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூர் ஆகிய பகுதகிளில் இருந்து மதுரை, ராமேஸ்வரம், நெல்லை, செங்கோட்டை ஆகிய மார்க்கங்களில் காலதாமதமின்றி சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை