உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆனையூர் அங்கன்வாடி மையம் முன் பேவர் பிளாக் பதிப்பு

ஆனையூர் அங்கன்வாடி மையம் முன் பேவர் பிளாக் பதிப்பு

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே ஆனையூர் அங்கன்வாடி மையம் முன்பு மழைநீர் தேங்காமல் இருக்க பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது.சிவகாசி அருகே ஆனையூரில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் முன்பு வளாகம் தாழ்வாக இருந்தது. இதனால் மழைக்காலங்களில் அங்கன்வாடி மையம் முன்பு தண்ணீர் தேங்கியது.குழந்தைகள் இதனை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மேலும் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பாதிப்பிற்கும் ஆளாகினர். மழை எப்போது பெய்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி மையம் முன்பு மழை நீர் தேங்காாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக அங்கன்வாடி மையம் முன்பு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை