மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
18 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
18 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் முத்துராமலிங்க நகரில் அரசு ஊழியர் சங்க கட்டடம் செல்லும் வழியில் ஒரு மாதத்திற்கு மேலாக கொட்டிய ஜல்லியோடு பணிகள் நிற்பதால் மக்கள் பரிதவிக்கின்றனர்.விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் முத்துராமலிங்க நகர் பகுதி உள்ளது. நகராட்சியை யொட்டி உள்ளதால் வளர்ந்து வரும் பகுதி. மேலும் சிவகாசி ரோடு இப்பகுதி வழியாக வருவதால் குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. இங்குள்ள அரசு ஊழியர் சங்க கட்டடம் செல்லும் வழியில் உள்ள ரோட்டில் ஒரு மாதம் முன்பு ரோடு போடும் பணிகள் துவங்கியது.ஜல்லிகள் பரப்பியதோடு பணிகள் நிறுத்தப்பட்டன. அதற்கு பின் எந்த பணியும் நடக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவசரத்திற்கு வெளியே செல்லும் போது சிரமத்துடன் செல்கின்றனர். ஆம்புலன்ஸ்கள் கூட உள்ளே வர முடிவதில்லை. வாகனங்கள் பழுதாகின்றன. ஆகவே பணிகளை துவங்கி ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் செல்வி கூறியதாவது: ஒப்பந்ததாரர் உடல்நிலை சரி இல்லாததால் பணிகள் திடீரென நின்று விட்டது. ஒரு வாரத்திற்குள் பணிகள் துவக்கப்படும், என்றார்.
18 hour(s) ago
18 hour(s) ago