உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பேயனாற்றில் நீர்வரத்து குளித்து மகிழும் மக்கள்

 பேயனாற்றில் நீர்வரத்து குளித்து மகிழும் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பக தோப்பு பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் மக்கள் குளித்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பெய்த மழையின் காரணமாக பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு செல்ல மக்கள் அனுமதிக்கப் படவில்லை. இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததால், நேற்று முதல் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். மிகவும் குறைந்த அளவு மக்களே வந்திருந்தனர். அவர்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். இருந்த போதிலும் தண்ணீர் வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை