உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆமை வேகத்தில் நடக்கும் வாறுகால், பேவர் பிளாக் பதிக்கும் பணி சாத்துாரில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி

ஆமை வேகத்தில் நடக்கும் வாறுகால், பேவர் பிளாக் பதிக்கும் பணி சாத்துாரில் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி

சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள மெயின் ரோட்டில் ஆமை வேகத்தில் நடக்கும் வாறுகால், பேவர் பிளாக் பதிக்கும் பணியாயல் கடும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாத்துார் அண்ணா பவள விழா பஸ் ஸ்டாண்ட் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஒரு ஏக்கருக்கும் குறைவான இங்கு 30 பஸ்கள் மட்டுமே நிறுத்தும் வசதி உள்ளது.பஸ் ஸ்டாண்ட் முன்பு திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே பள்ளிகளும் உள்ளது. கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களும் டவுன் பஸ் மூலம் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கி பள்ளிகளுக்கு செல்கின்றனர்.இதன் காரணமாக பஸ் ஸ்டாண்ட் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆட்டோக்களில் வரும் மாணவர்கள் இறங்கி செல்வதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ரோட்டிலேயே மாணவர்களை இறக்கி விடுகின்றனர்.சாத்துாரில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் முன்பு பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் நிலையில் இந்தப் பகுதி காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் நிலை உள்ளது.போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்த போதும் நெரிசலுக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளது.மெயின் ரோட்டில் மக்கள் நடந்து செல்வதற்காக ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது. ரோட்டின் ஓரத்தில் ஜல்லிகற்கள் எம் சாண்ட் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதசாரிகள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலையில் மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் முன்பு வெளியூர் பஸ் நிற்கும் இடத்தில் இரு சக்கர வாகனங்களை மக்கள் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதன் காரணமாகவும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பெற்றோர் அவதிஎத்தல் ஹார்வி ரோடு மெயின்ரோடு சந்திக்கும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிகளில் மாணவர்களை இறக்கி விட வரும் பெற்றோர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மினி பஸ் ,ஆட்டோ ,டவுன் பஸ் ஆகியவை இந்தப் பகுதியை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இருசக்கர வாகனத்தில் வரும் பெற்றோர் தடுமாறி குழந்தைகளுடன் விழும் நிலை உள்ளது. நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.- வனராஜ், குடும்பத் தலைவர்ஆமை வேக பணியால் பாதிப்புபெட்டோரல் பல்க் முதல் முக்கு ராந்தல் வரை மக்கள் வசதிக்காக பேவர் பிளாக் கல் பதிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் ரோட்டில் இந்த பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரோட்டின் ஓரத்தில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் கிராமங்களில் இருந்து நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு ஆட்டோவில் படிக்க வரும் மாணவர்கள் ரோட்டில் இறக்கி விடப்படுகின்றனர். காலை நேரங்களில் கல்லுாரி பள்ளி வாகனங்கள் அதிக அளவில் வரும் நிலையில் இதனால் பஸ் ஸ்டாண்ட் முன்பு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- அப்துல் ரகுமான், குடும்பத் தலைவர்

தீர்வு

மெயின்ரோட்டில் வாறுகால், பேவர் பிளாக் கல்பதிக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வளர்ச்சி பணிகள் முடியும் வரையில் பஸ் ஸ்டாண்ட் முன் வெளியூர் பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதை மாற்றி பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதன் மூலம் மெயின்ரோட்டில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை