சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் சில தினங்களாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.நேற்று, திடீரென பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படவில்லை. சதுரகிரி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள நீரோடைகளில் நீர்வரத்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.விடுமுறை நாளான நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து ஏமாற்றமடைந்தனர்.