50 ஏக்கர் சேதம் இழப்பீடு கோரி மனு
விருதுநகர்: சாத்துார் பகுதி விவசாயிகள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: சாத்துார் என்.முத்துச்சாமிபுரம், முள்ளிசெவல், சுப்ரமணியபுரம் பெருமாள் பட்டி, காக்கிவாடன்பட்டி, நல்லமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் மக்காசோளம், உளுந்து பயிர் வகைகள் அதிகம் விளைவிக்கப்பட்டது. இதில் மக்காச்சோளம் 30 ஏக்கரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விட்டன.டிச.ல் பெய்த கனமழையால் உளுந்து பயிரும் விளைந்து வரும் நேரத்தில் 20 ஏக்கர் சேதமாகி விட்டது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவிட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதிக்கு விரைந்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.