உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மறியல் போராட்டம்: 1559 பேர் கைது

மறியல் போராட்டம்: 1559 பேர் கைது

விருதுநகர்: நுாறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக அறிவிப்பது, குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பா.ஜ., அரசை கண்டித்துஅனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்மறியல் போராட்டம் நடந்தது.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். எல்.பி.எப்., நிர்வாகி ராஜசெல்வம், ஏ.ஐ.டி.யு.சி., பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.இதே போல் மாவட்டம் முழுவதும் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை என 11 இடங்களில் நடந்த மறியல் பேராட்டத்தில் 1559 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை