மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போட்டோகிராபர் கைது
27-Dec-2024
ராஜபாளையம்; ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அருகே குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பால் தண்ணீர் ரோட்டில் வீணாகி வருகிறது.ராஜபாளையம் முடங்கியார் ரோடு தாலுகா அலுவலக காம்பவுண்ட் அருகே நீதிமன்றம் செல்லும் சந்திப்பு உள்ளது. இதனருகே தாமிரபரணி குடிநீர் குழாய் இணைப்பில் அடிக்கடி சேதம் ஏற்பட்டு தண்ணீர் பல நாட்களாக வீணாகி ரோட்டில் ஓடி வருகிறது. இணைப்பு பகுதியாக உள்ளதால் அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருவதுடன் இப்பகுதி ரோடு சேதம் அடைந்து விட்டது.இது குறித்து இப்பகுதி குமரேசன்: முடங்கியாறு ரோட்டில் இருந்து மாடசாமி கோயில் தெரு திருப்பம், ஆர்.ஐ அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் என முக்கிய பகுதியாக இங்கு வாரக்கணக்கில் பிரச்சனை நீடிக்கிறது. ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறப்பின் போது குடிநீர் ரோட்டில் வழிவதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. நிரந்தர தீர்வு காண எதிர்பார்க்கிறோம்.
27-Dec-2024