உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் தேருக்கு பைபர் கூண்டு

ஆண்டாள் தேருக்கு பைபர் கூண்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் நூற்றாண்டு பழமை வாய்ந்த தேரினை மக்கள் எளிதில் பார்க்கவும், மழை, வெயில் காலங்களில் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீ குமரன் தங்கமாளிகை சார்பில் பைபர் கூண்டு அமைக்கப்படடு நேற்று அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து மக்களும் தேரினை பார்க்கும் வகையில் இந்த கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.இதனை கோயிலுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் தேரின் பைபர் கூண்டினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை