உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி அருகே 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

சிவகாசி அருகே 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

சிவகாசி : சிவகாசி அருகே வேண்டுராயபுரம் ஊராட்சி கோப்பை நாயக்கன்பட்டியில் சிவகாசி பசுமை மன்றம், மாவட்ட நிர்வாகம் சார்பில் பழவம் குறுங்காடு என்ற பெயரில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.சிவகாசி அருகே வேண்டுராயபுரம் ஊராட்சி கோப்பைநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலம் இருந்தது. இங்கு மரக்கன்றுகள் நடுவதற்காக சிவகாசி பசுமை மன்றம் சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி அங்கே 10 ஏக்கர் முழுவதும் பென்சிங் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு ஏதுவாக நிலம் பண்படுத்தப்பட்டது. மரக்கன்று நடும் விழாவில் அசோகன் எம்.எல்.ஏ., கண்ணன் எஸ்.பி., சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் விவேகன் ராஜ் முன்னிலையில், கலெக்டர் ஜெயசீலன் நட்டு துவக்கி வைத்தார். இதில் 210 வகையான 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. 6800 அடி பாசன குழாய்கள், 9000 மீட்டர் சொட்டுநீர் பாசன அமைப்பு, 3510 அடிக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த 1066 மாணவர்கள், தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர். ஏற்பாடுகளை பசுமை மன்றம் தலைவர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், செந்தில்குமார், செயலாளர் காமராஜ், பொருளாளர் சுரேஷ் தர்கர், செய்தனர். பசுமை மன்றம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கூறுகையில், பல்வேறு தன்னார்வலர்கள் அமைப்புகளின் ஒத்துழைப்போடு 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.அனைத்து மரக்கன்றுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்காக பாசன குழாய்கள், சொட்டுநீர் பாசன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் வளரும்போது பல்லுயிர் பெருக்கம் உருவாகும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ