| ADDED : நவ 26, 2025 02:17 AM
முதியவர் மாயம் சாத்துார்: மேட்டமலையை சேர்ந்தவர் ஜெயமேரி, 65. இவர் கணவர் அண்ணாமலை, 73. நவ.22 அதிகாலை 4:00 மணிக்கு டீ குடிப்பதற்காக சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக் கின்றனர். வாலிபர் மாயம் சாத்துார்: -விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள். 33,இவர் கணவர் மகாதேவன். 41, நவ. 16ல் இருக்கன் குடி மாரியம்மன் கோயிலில் நடந்த உறவினரின் காது குத்து நிகழ்ச்சிக்கு வந்தவர் மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலி சாத்துார்: ஆலங்குளம் அருகே அம்மையார் பட்டியை சேர்ந்தவர் பிச்சை மணி, 49. செங்கல் சூளை தொழிலாளி. நேற்று முன்தினம் மதியம் 3:45 மணிக்கு செவல்பட்டிக்கு டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். அம்மையார் பட்டி விலக்கில் சிலிண்டர் ஏற்றி வந்து ரோட்டில் சிக்னல் ஏதுமின்றி நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோவின் பின்னால் மோதியதில் தலையில் அடிபட்டு பலியானார். லோடு ஆட்டோ டிரைவர் சிவகாசி நாரணாபுரம் கேசவ் , 60. மீது வழக்கு பதிந்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.