உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மினி லாரி மோதி பலிவிருதுநகர்: சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் 48. இவர் டிச. 2 காலை 10:35 மணிக்கு பணி நிமித்தமாக டூவீலரில் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் சென்றார். அப்போது மினிலாரி மோதியதில் சுப்பிரமணியன் பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.லோடு வேன் மோதி விபத்துவிருதுநகர்: கன்னிச்சேரி புதுாரைச் சேர்ந்தவர் மாடசாமி 40. இவர் டிச. 1 மதியம் 1:45 மணிக்கு டூவீலரில் சதானந்தபுரம் ரோட்டில் வந்தார். அப்போது லோடு வேனில் வந்த ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 35, மோதியதில் மாடசாமி காயமடைந்தார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கார்மோதி காயம்விருதுநகர்: மதுரை, கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் மாதவக்கண்ணன் 28. இவர் டூவீலரில் விருது நகர் - புல்லலக்கோட்டை ரோட்டில் டிச.1 மாலை 4:45 மணிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்பனை :4 பேர் கைதுசிவகாசி: சிவகாசி டவுன் எஸ்.ஐ., செல்வி, போலீசார் தட்டாவூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுந்தரம் தெரு மெய்யண்ணன் 20, பராசக்தி காலனி முத்துக்குமார் 23, தட்டாவூரணி சந்தோஷ் குமார் 20, சோலை காலனி நிவாஸ் 23, ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தனர். போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.லாரி டூவீலர் மோதல்சாத்துார்: வெம்பக்கோட்டை எட்டக்காபட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 27 . நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சிவகாசி சென்றார். மடத்துப்பட்டி ரோட்டில் எதிரில் வந்த சிவகாசி லாரி டிரைவர் சக்கையன், 40. ஓட்டி வந்த டிப்பர் லாரி மோதியதில் ஜெயக்குமார் காயம் அடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் காயம்சாத்துார்: சிவகாசி புது காலணியைச் சேர்ந்தவர் முருகன் மகன் தர்மதுரை, 25. மீன் வியாபாரி. டிச.31 இரவு 8:45. மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) இருக்கன்குடி அணையில் மீன் வாங்க வந்தார். சின்னக்காமன்பட்டி விலக்கு அருகே டூவீலர் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவிக்கு சீண்டல்இளைஞர் மீது போக்சோராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 16 வயது பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த திலீப் குமார் 19, அடிக்கடி கேலி,செய்ததுடன் ஸ்கூல் பையை பிடித்து இழுத்தார். மகளிர் போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.----பசு மாடு திருட்டுராஜபாளையம்: மாலையாபுரத்தை சேர்ந்தவர் பாலம்மாள் 60. மூன்று பசு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற ஒரு மாடு மட்டும் உடல் சரியில்லாமல் திருவள்ளுவர் நகர் அருகே படுத்து கிடந்துள்ளது. மறுநாள் பிடித்துச் செல்லலாம் என்று வந்து பார்த்தபோது ரூ.10,000 மதிப்புள்ள பசுமாட்டை காணவில்லை. தாட்கோ காலனியை சேர்ந்த ரஞ்சித் திருடி சென்றதாக வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை