உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

வாலிபர் பலிசிவகாசி: பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணி 23. பாலிபேக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் தனது டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) வேலாயுதம் ரஸ்தா ரோட்டில் சென்ற போது சவுந்தர் ஒட்டி வந்த லோடு வேன் மோதியதில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.குட்கா பறிமுதல்: மூன்று பேர் கைதுசிவகாசி: திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் 65, சாந்தி 57 ஆகியோர் தங்களுடைய பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தனர்.திருத்தங்கல் போலீசார் தடை புகையிலை பொருட்கள், ரூ.5500 பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் சப்ளை செய்த விருதுநகர் கன்னிசேரியை சேர்ந்த முனியசாமியையும் போலீசார் கைது செய்தனர்.வியாபாரி கீழே விழுந்து காயம்விருதுநகர்: சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் பவுன்சாமி. இவர் ஜன. 4 இரவு 9:00 மணிக்கு உப்போடை - சேர்வைக்காரன்பட்டி ரோட்டில் டூவீலரில் சென்ற போது நிலை தடுமாறி விழுந்து காயமடைந்ததால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் மோதி :முதியவர் காயம்விருதுநகர்: மத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாக்கனி 80. இவர் ஜன. 5 மதியம் 1:30 மணிக்கு சைக்கிளில் மத்தநாயக்கன்பட்டி ரோட்டில் சென்றபோது பின்னால் டூவீலரில் வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் மோதியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை