உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மூட்டு வலி தைலத்தை குடித்த முதியவர் பலிவத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா சுரைக்காய் பட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன், 84, விவசாயி. இவர் வயது மூப்பின் காரணமாக கை, கால் நடுக்கம் ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மூட்டு வலிக்கு தேய்க்கும் தைலத்தை தவறுதலாக குடித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். நத்தம் பட்டி போலீசார் விசாரித்தனர்.பள்ளியில் வாட்ச்மேன் தற்கொலைஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கொளூர்பட்டி தெருவை சேர்ந்தவர் ராமர்,55, சேஷா மெட்ரிக் பள்ளியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பள்ளியில் உள்ள செக்யூரிட்டி அறையில் தூக்கிட்டு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரித்தனர்.பட்டாசு பறிமுதல்சிவகாசி: சிவகாசி பி.கே.எஸ்., தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜன் 45. இவர் ராமசாமிபுரத்தில் உள்ள பட்டாசு கடை அருகே தகர செட் அமைத்து அனுமதி இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.மனைவியின் கழுத்தறுக்க முயன்ற கணவன்சிவகாசி: சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்தவர் கவிதா 25. இவரது கணவர் விக்னேஷ் 25. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கவிதா வீட்டிலிருந்த போது அங்கு வந்த விக்னேஷ் கத்தியால் கழுத்தை அறுக்க முயன்றார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கொலை மிரட்டல்சிவகாசி: சிவகாசி நாரணாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து 37.இவரை மூன்று மாதத்திற்கு முன்பு சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த ரமேஷ், பாலாஜி ஆகியோர் வெட்டியதற்கு சிறைக்குச் சென்றனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், மாரிமுத்துவை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.------டூவீலர் விபத்து: ஒருவர் பலிசாத்துார்: சாத்துார் என். சுப்பையாபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ் 53. ஜன.24ல் இவரது எக்ஸெல் டூவீலர் பழுதானதால் வள்ளி மில் அருகில் உள்ளஒர்க்ஷாப்பிற்கு உருட்டிக் கொண்டு சென்றார். அப்போது குறுக்கே ஆலமரத்துபட்டியை சேர்ந்தகண்ணன் மகன் சதீஷ்குமார், 29 .ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது. சிங்கராஜ் படுகாயம் அடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.தாயை தாக்கிய மகன் கைதுசாத்துார்: இருக்கன்குடியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி முத்தாவரணம், 60 .இவர் மகன் ரமேஷ், 36. முத்தா வரணம் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனுக்கும் தாய்க்கும் இடையே பாகப்பிரிவினை செய்யப்பட்டது. இந்த நிலையில் மகனுக்கு சொந்தமான இடத்தில் கிரைண்டரில் மாவு அரைக்க முத்தாவரணம் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்தமகன் , தாயாரை அடித்து உதைத்து தாக்கினார். இருக்கன்குடி போலீசார் மகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி