உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கேட்பாரற்று சேதமுறும் மின்கம்பங்கள்

கேட்பாரற்று சேதமுறும் மின்கம்பங்கள்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பங்கள் ரோட்டோரம், சாக்கடையில் கேட்பாரற்று போடப்பட்டுள்ளதால் சேதமடையும் நிலைக்கு மாறுகிறது. வீணாவதற்கு முன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜபாளையம் மின்வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் சேதம் அடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்களை மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள சுதர்சனம் கார்டன் நுழைவு பகுதியில் சில மாதங்களுக்குமுன் போட்டு வைத்திருந்தனர்.தேவைகளுக்கு ஏற்ப எடுத்து மீதம் உள்ள மின் கம்பங்களை அப்படியே போட்டு வைத்துள்ளனர். இவை சுதர்சனம் கார்டன் மெயின் ரோட்டின் இரண்டு பக்கத்திலும் ஆட்டோ நிறுத்த தடுப்பு, குப்பைகளுக்கு இடையே, சாக்கடையில் என கேட்பாரற்று உள்ளதால் சேதம் அடைந்து வருகிறது.பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் முன் இவற்றை அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பது இப்பகுதியினரின் எதிர்பார்ப்பு. இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளர் முத்துராஜ்: மின்கம்பங்களை மீட்டு பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ