உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசியில் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டிய தனியார் பஸ் டிரைவர்

அலைபேசியில் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டிய தனியார் பஸ் டிரைவர்

திருச்சுழி : திருச்சுழி அருகே எஸ்.கல்லுப்பட்டியிலிருந்து அருப்புக்கோட்டை சென்ற தனியார் பஸ்சின் டிரைவர் அலைபேசியில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கியதை போலீசார் கண்டித்தும் கண்டு கொள்ளாததால் பயணிகள் உயிர் பயத்துடனேயே பயணம் செய்தனர். நேற்று காலை எஸ். கல்லுப்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு, மறவர் பெருங்குடி, எம். ரெட்டியபட்டி, கல்லூரணி வழியாக அருப்புக்கோட்டைக்கு தனியார் பஸ் வந்து கொண்டு வந்திருந்தது. இந்த பஸ் காலை 11:00 மணிக்கு கல்லூரணி அருகே வந்த போது பஸ்சின் டிரைவர் அலைபேசியில் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டி சென்றார். அங்கிருந்த போலீசார் இதை கவனித்து டிரைவரை கண்டித்துள்ளார். அவரையும் அலட்சியம் செய்துவிட்டு தொடர்ந்து அவர் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டி சென்றார். கல்லூரணி வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கற்கள், எம்.சாண்ட் ஏற்றி செல்லும். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியில் அலைபேசியில் பஸ் ஓட்டிச் சென்ற டிரைவரை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்துடன் பயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை