மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஓய்வு நாள் பள்ளி மாணவருக்கான வேதாகம போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குரு சேகர தலைவர் பால் தினகரன் பரிசுகள் வழங்கி ஆசிர்வதித்தார். குருசேகர கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். * திரு இருதய சர்ச்சில் புனித வின்சென்ட் பவுல் சபை சார்பில் ஏழை மாணவர்களுக்கு பாதிரியார் சந்தன சகாயம் இலவச சீருடைகளை வழங்கினார். மத்திய சபை செயலாளர் பரலோகம், கிளை சபை தலைவர் புனிதன் உட்பட பலர் பங்கேற்றனர்.