உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராதா- மாதவ விவாஹ மஹோத்ஸவம்

ராதா- மாதவ விவாஹ மஹோத்ஸவம்

விருதுநகர் : விருதுநகரில் பிராமண ஸமாஜம் சார்பில் ராதா - மாதவ விவாஹ மஹோத்ஸவம் நடந்தது. இதற்கு விருதுநகர் பிராமண ஸமாஜத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஜெயராமன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பஜனோற்ஸவ சம்பிரதாய முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவை குருராஜன் பாகவதர் குழுவினர் சிறப்பு அபிநய நாட்டிய நடனம் நிகழ்த்தினர்.ஜன. 6, 7 என இரண்டு நாட்கள் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆஞ்சநேயர் உற்ஸவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ