உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராமகோபாலன் பிறந்தநாள்

ராமகோபாலன் பிறந்தநாள்

காரியாபட்டி: காரியாபட்டியில் இந்து முன்னணி சார்பாக துறவி ராமகோபாலன் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் பிரபு, பா.ஜ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் வேம்புளு வடிவேல், பா.ஜ., மாவட்ட ஆன்மிகப் பிரிவு செயலாளர் வேல் ராமலிங்கம், கூட்டுறவு பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் சக்கையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் : ராஜபாளையம் ஹிந்து முன்னணி சார்பில் நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் விழா 7 இடங்களில் கொண்டாடப்பட்டது. அம்பலப்புலி பஜார், சிவகாமி தெரு, தெற்கு மலையடிப்பட்டி, மீனாட்சி தியேட்டர், பச்சமடம் உள்ளிட்ட இடங்களில் உருவப் படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாவட்ட துணை தலைவர் சஞ்சீவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சித்திரபுத்திரன், நகர தலைவர் மகாதேவன், அன்னையர் முன்னணி அமைப்பினர் உள்பட ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி