உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராமேஸ்வரம்-திருவனந்தபுரம் ரயில் தேவை

ராமேஸ்வரம்-திருவனந்தபுரம் ரயில் தேவை

ராஜபாளையம்: ராமேஸ்வரத்திலிருந்து ராஜபாளையம் வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் இயக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியே சென்னை, திருச்சி, மதுரை, கொல்லம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.பெங்களூரு, கோவை, திருவனந்தபுரம், பழநி, பொள்ளாச்சி, சேலம் பகுதிகளுக்கு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஹிந்துக்களின் புண்ணியபூமியான ராமேஸ்வரத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்து ரயில்கள் உள்ளன. ஆனால் ராஜபாளையம் வழியில் நேரடி ரயில் இல்லை.ராமேஸ்வரம் கோயில், கோதண்டராமர் கோயில், அரிச்சல் முனை கடல், பாம்பன் பாலம், கடல் தீவுகள், கடல் படகு சுற்றுலா என அங்கு பல இடங்கள் உள்ளன.எனவே ராமேஸ்வரம்-- திருவனந்தபுரம் இடையே ராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, புனலுார், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும் என விருதுநகர், தென்காசி மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை