உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏழாயிரம் பண்ணையில் சூறவாளிக்கு சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்

ஏழாயிரம் பண்ணையில் சூறவாளிக்கு சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்

சாத்துார் : ஏழாயிரம் பண்ணை அருகே வீசிய சூறாவளியால் சாலையில் சாய்ந்த மரங்களை நேற்று தீயணைப்பு துறை வீரர்கள் அகற்றினர்.சாத்துார் ஏழாயிரம் பண்ணை தாயில்பட்டி வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு சூறாவளியுடன் மழை பெய்தது.இதில் ஏழாயிரம் பண்ணை கீழ செல்லையாபுரம் குண்டாயிருப்பு ரோட்டில் சாலையோரம் வளர்ந்திருந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள் காற்றில் முறிந்து சாலையில் விழுந்தது. தீயணைப்பு துறை வீரர்கள் தற்காலிகமாக பஸ் போக்குவரத்திற்கு சாலையை மறித்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர்.புளி,வேம்பு, வாகை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மரங்களில் கிளைகள் முறிந்து மீண்டும் சாலையில் விழும் நிலையில் இருந்தது.முறிந்த மரங்களை நேற்று ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய வீரர்கள் இயந்திரங்கள் கொண்டு வெட்டி அகற்றினர்.மரங்கள் முறிந்ததால் ஏற்பட்ட மின்தடையை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை