உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் அடுத்தடுத்து இரு இடங்களில் உடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது.சிவகாசி இரட்டை பாலத்தில் இருந்து அரசு மருத்துவமனை வழியாக ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் குழாய் பதிக்கப்பட்டு அப்பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது.இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் அருகே அடுத்தடுத்து இரு இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக ஓடியது. மாநகராட்சியில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் இல்லாத நிலையில் குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் ஓடுவதால் பற்றாக்குறை ஏற்பட்டது.மேலும் ரோட்டில் ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர். தவிர குழாய் சேதமடைந்த இடத்தில் ரோடும் சேதமடைந்தது. எனவே இப்பகுதியில் உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக அப்பகுதியில் சேதம் அடைந்திருந்த இரு இடங்களிலும் குழாய் சரி செய்யப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை