உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது.சிவகாசி சேர்மன்சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக நகர் முழுவதும்குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இதே ரோட்டில் உழவர் சந்தை செல்லும் ரோடு விலக்கில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குடிநீர் ரோட்டில் வீணாக ஓடியது. ஒரு வாரத்திற்கும் மேலாக குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் ஓடியதால் ரோடும் சேதமடைந்தது. மேலும் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உடைந்த குழாய் உடனடியாக சரி செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை