உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுநீர் கழிப்பிடங்கள்

மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுநீர் கழிப்பிடங்கள்

சிவகாசி,: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சியில் துாய்மை இந்தியா திட்டம் 2.0ன் கீழ் கட்டப்பட்ட சிறுநீர் கழிப்பிடங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.சிவகாசி மாநகராட்சியில் மத்திய அரசின் திட்டமான துாய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தலா ஆறு இருக்கை கொண்ட சிறுநீர் கழிப்பிடம், ராணி அண்ணா காலனி, காமராஜர் பூங்கா, பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு தெய்வானை நகர், பி.கே.என். ரோடு, திருத்தங்கல் உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.1.92 லட்சம் மதிப்பீட்டில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் படி மத்திய அரசின் பங்களிப்பு 50 சதவீதம், மாநில அரசின் பங்களிப்பு 33 சதவீதம், மாநகராட்சி பொது நிதி பங்களிப்பு 17 சதவீதம் என நிதி உதவியுடன் கட்டப்பட்டது. இவைகள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் மக்கள் பயன்படுத்த துவங்கினர். ஆனால் சில வாரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பெரும்பான்மையானவை பயன்பாட்டில் இல்லை. ராணி அண்ணா காலனி, காமராஜர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டப்பட்டிருந்தது. இதனால் திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்பட்டது. எனவே இந்த சிறுநீர் கழிப்பிடங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ராணி அண்ணா காலனி, காமராஜர் ரோடு, பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறுநீர் கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை