உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி

ரோடு, வாறுகால் சேதம் குடியிருப்புவாசிகள் அவதி

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் ரோடு வாறுகால் சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிப்பதற்காக ரோடு தோண்டப்பட்டது. மீண்டும் சீரமைக்கப்படாததால் தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதில் டூவீலர் சென்று வருவது சிரமமாக உள்ளது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்தப் தெருவை கடந்து தான் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., காலனி ,முருகன் காலனிக்கு மக்கள் செல்ல வேண்டும். ஆனால் ரோடு சேதத்தால் இப்பகுதியினர் சிரமப்படுகின்றனர்.தவிர தெருவில் வாறுகாலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கழிவு நீர் தெருவில் ஓடுகின்றது. மழைக் காலங்களில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் ரோடு வாறுகாலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி