உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டி.ஆர்.ஓ., பதவியேற்காததால் வருவாய் பணிகள் பாதிப்பு

டி.ஆர்.ஓ., பதவியேற்காததால் வருவாய் பணிகள் பாதிப்பு

விருதுநகர்: விருதுநகரில் டி.ஆர்.ஓ., இடமாற்றத்திற்கு பின் புதிய டி.ஆர்.ஓ., பதவியேற்காததால் வருவாய் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக ரவிக்குமார் பணியாற்றி வந்தார். அவர் 2023 டிச. 13ல் சென்னை ஆயத்தீர்வை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய டி.ஆர்.ஓ.,வாக வன்னியர் வாரிய உறுப்பினர் செயலாளர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். தற்போது வரை பதவியேற்கவில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் வருவாய் தொடர்பான பணிகள் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளன. நில எடுப்பு, பட்டாசு ஆலை உரிமம் புதுப்பித்தல், நிலம் தொடர்பான விசாரணைகள் முடித்து வைப்பு போன்றவை டி.ஆர்.ஓ., பணி. தற்போது வரை அதிகாரி பதவியேற்காததால் கலெக்டரே கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் முக்கியமான பொறுப்பான டி.ஆர்.ஓ., பணி கூடுதல் பொறுப்பில் உள்ளதால் கள ஆய்வுகள், பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. ஆகவே விரைந்து டி.ஆர்.ஓ., பதவியேற்பை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ