உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலையோர பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

சாலையோர பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

சாத்துார்: சாத்துார் ஏழாயிரம்பண்ணை ரோட்டில் சாலையோரத்தில் உள்ள பட்டுப்போன மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சாத்துார் - ஏழாயிரம்பண்ணை ரோட்டில் மேட்டூர் அரசு துவக்கப்பள்ளி அருகில் சாலை ஓரத்தில் பட்டுப்போன சவுக்கு மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இலைகள் முற்றிலும் உதிர்ந்து மரம் முழுவதும் பட்டுப் போன நிலையில் காணப்படுகிறது.பட்டுப்போன மரத்திலிருந்து கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்தாலோ,சாலை ஓரத்திலும் துவக்கப்பள்ளி அருகிலும் விழுந்தாலோ போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பட்டுப் போன மரத்தின் வழியாக நடந்து செல்லுபவர்களும் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது.விபத்து ஏற்படுவதற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறையின காய்ந்து போன மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை