உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  டூவீலர் ஸ்டாண்டுகளாகமாறும் ரோடுகள் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் தவிப்பு

 டூவீலர் ஸ்டாண்டுகளாகமாறும் ரோடுகள் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய, மாநில, நகராட்சி ரோடுகளில் டூவீலர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு டூவீலர் ஸ்டாண்டுகளாக மாறி வருவதால் நடந்து செல்லும் மக்கள் தவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். நகரில் அனைத்து பஜார் வீதிகளிலும் மக்கள் நடந்து செல்லும் பாதைகளில் டூவீலர்கள் நிறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூர் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், நகரின் விரிவாக்க புதிய குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் தேசிய, மாநில, நெடுஞ்சாலை ரோடுகளிலும், நகராட்சிக்கு சொந்தமான தெரு ரோடுகளிலும் தங்களது சைக்கிள்கள், டூவீலர்களை காலையில் நிறுத்திவிட்டு மாலையில் வந்து தான் எடுத்துச் செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள ரோடுகள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிகளவில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதை காண முடிகிறது. இதனால் நடந்து செல்லும் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை