உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 55 பவுன் கொள்ளை

வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 55 பவுன் கொள்ளை

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கணவன், மனைவி, குழந்தைகளை கட்டிப் போட்டு 55 பவுன் தங்க நகைகள், ரூ.55 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராஜபாளையம் ஆண்டாள்புரம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். நியூட்ரிஷன் நிபுணர். மனைவி இந்துமதி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி அனைவரையும் கட்டி போட்டுள்ளனர். பீரோவில் இருந்த 55 பவுன் தங்க நகை, ரூ. 55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து கண்காணிப்பு கேமராவை சேதப் படுத்தி, அலைபேசிகளையும் பறித்து சென்றது.ராஜபாளையம் டி.எஸ்.பி., நாகராஜன், ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., முகேஷ் ஜெயக்குமார், கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி மற்றும் போலீசார் ஆய்வு செய்து அக்கம் பக்கத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ