உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பொறியாளர் கைது

 ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பொறியாளர் கைது

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கணேசன் 54, ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக பெற்ற போது கைது செய்யப்பட்டார். மதுரை செல்லுாரைச் சேர்ந்த முதல் நிலை ஒப்பந்ததாரர் பழனிக்குமார் 42. காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 1.38 கோடியில் மின் மயானம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். இதற்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 160 வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்க ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என பேரூராட்சி இளநிலை பொறியாளர் கணேசன் கேட்டார். பழனிக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி நேற்று காலை 10:00 மணிக்கு, முன் பணமாக ரூ. 50 ஆயிரத்தை அலுவலகத்தில் இருந்த கணேசனிடம் கொடுத்தார். அங்கிருந்த ஏ.டி.எஸ். பி., ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜாஸ்மின் மும்தாஜ், பூமிநாதன் ஆகியோர் கணேசனை கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரியாபட்டி பள்ளத்துப்பட்டியில் உள்ள கணேசன் வீட்டிலும் சோதனை செய்து கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 23 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ