மரக்கன்றுகள் நடும் விழா
காரியாபட்டி : காரியாபட்டி வரலொட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில், மாவட்ட ஊர்க்காவல் படை சார்பாக, முன்னாள்ஜனாதிபதி அப்துல் கலாமின் லட்சியங்கள் என்ற தலைப்பில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நடந்தது. மாவட்ட ஊர்க்காவல் படை எஸ்.ஐ., தேவதாஸ், கம்பெனி கமாண்டர் வெங்கடேஷ் பெருமாள் பேசினர். ஊராட்சி தலைவர் திருப்பதி, மாவட்ட பிரதிநிதி மாரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஏற்பாடுகளை ஊர்க்காவல் படை பிளடூன் கமாண்டர் நாகவேலன் செய்திருந்தார்.