மேலும் செய்திகள்
ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பை
06-Nov-2024
சிவகாசி: சிவகாசி அருகே பூலாவூரணியில் இருந்து கிச்சநாயக்கன்பட்டி செல்லும் ரோட்டிலே குப்பை கொட்டப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள், மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே போடுரெட்டியபட்டி, கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் பூலாவூரணி வழியாக விளாம்பட்டிக்கு படிக்க வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் வங்கி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இதே வழியில் விளாம்பட்டி வருகின்றனர். இந்நிலையில் பூலாவூரணியில் இருந்து விளாம்பட்டி செல்லும் ரோட்டின்மேலேயே குப்பை கொட்டப்பட்டுள்ளது.இதனால் பாதி ரோடு குப்பையால் மறைக்கப்பட்டு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குப்பையை கடந்து வருகிற மாணவர்கள் துர்நாற்றத்தால் பெரிதும் அவதிப்படுகின்றனர். காற்று அடிக்கும்போது குப்பைகள் பறந்து டூவீலர், சைக்கிளில் செல்பவர்களை தடுமாறச் செய்கிறது.தவிர இங்குள்ள சுகாதார வளாகத்தின் வாசலையும் மறைத்து குப்பை கிடப்பதால் சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதற்கு மக்கள் தயங்குகின்றனர். எனவே இப்பகுதியில் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
06-Nov-2024