உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி வேலை நாட்களோ 220... நடத்த சொல்லும் விழாக்களோ 122...

பள்ளி வேலை நாட்களோ 220... நடத்த சொல்லும் விழாக்களோ 122...

அருப்புக்கோட்டை:'பள்ளி கல்வித்துறை அறிவித்த ஓராண்டில் 220 பள்ளி வேலை நாட்களில் 120 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்த கூறுவதால் கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது,' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணி மாநில தலைவர் குணசேகரன் கூறியுள்ளதாவது:தமிழக அரசு பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள், நவீன அப்டேட்களை செய்து வருகிறது. ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்ட் என பல வசதிகள் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டு வரப்பட்டுள்ளன. கல்வித்துறை திட்டங்கள், அறிவிப்புகள், தேவைப்படும் விபரங்களை உடனுக்குடன் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அவர்களுடைய அலைபேசியில் அனுப்பப்பட்டு பெறப்படுகிறது. இதனால் எந்த நேரமும் அலைபேசியும் கையுமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டிய நிலையுள்ளது. இத்தகவல்களை அனுப்பிய பிறகு தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்று கொடுக்க வேண்டியுள்ளது.மேலும் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசு வழங்கும் விலையில்லா 15 வகையான பொருட்களை நேரில் எடுத்துச் சென்று வழங்க அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். கல்வித்துறை அறிவித்த காமராஜர் விழா, அண்ணா விழா, கலைஞர் விழா, குழந்தைகள் தின விழா உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட விழாக்கள், நிகழ்ச்சிகள் உள்ளன. இவற்றை நடத்த, ஏற்பாடுகள் செய்ய, மாணவர்களை தயார் படுத்த ஆசிரியர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. 2 நாட்களுக்கு 1 நிகழ்ச்சி நடத்த வேண்டியுள்ளது.இது தவிர ஆண்டாய்வு, அதிகாரிகள் விசிட் என தொடர் பணிகள் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால் கற்பித்தலில் முழு ஈடுபாடு காண்பிக்க முடியாத நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ