பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் மேட்டமலையைச் சேர்ந்தவர் ஆகாஷ்,21.விருதுநகர் அருகே ஒரு கிராமத்தில் பெற்றோரை இழந்து தாத்தா பராமரிப்பில் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலித்துள்ளார்.இருவரும் வெங்கடாசலபுரத்தில் ஆகாஷின் சித்தி கட்டி வரும் வீட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி கர்ப்பமானதை தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார்.சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பூங்கொடி, சிறுமியிடம் விசாரித்ததில் அவருக்கு16 வயது ஆவதும், சிறுமியை காதலிப்பதாக கூறி ஆகாஷ் கர்ப்பமாக்கியதும் தெரிந்தது. ஆகாஷ் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.