உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வாறுகால் அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவு நீர்

 வாறுகால் அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவு நீர்

சிவகாசி: சிவகாசியில் பழைய விருதுநகர் பழைய ரோட்டில் வாறுகால் அடைப்பால் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் பழைய விருதுநகர் ரோட்டில் இருபுறமும் மழைநீர், கழிவு நீர் வெளியேறுவதற்காக வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாறுகால் முழுவதும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் நிறைந்துள்ள நிலையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழி இல்லை. இதனால் இப்பகுதியில் கழிவுநீர் முழுவதும் வெளியேறி ரோட்டில் ஓடுகின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிது சிரமப்படுகின்றனர். வாகனங்கள் செல்லும்போது கழிவு நீர் அடிக்கப்பட்டு மற்றவர்களின் மீது தெறிக்கின்றது. தவிர அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே வாறுகாலில் கழிவுகளை அகற்றி தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ