உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இசேவை மைய கட்டடத்தில் ஆடுகள்

இசேவை மைய கட்டடத்தில் ஆடுகள்

சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியம் போத்தி ரெட்டிபட்டியில் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இ சேவை மைய கட்டடம் தற்போது ஆடுகள் அடைத்து வைக்கப்படும் இடமாக மாற்றப்பட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.பட்டா மாறுதல் அடங்கல் ஜாதி சான்றிதழ் இருபிடச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழுக்கும் இ சேவை மையம் மூலமாகவே மக்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் இ-சேவை மையங்களை அணுகுவதற்காக நகர் பகுதிக்கு வந்து செல்வதை தவிர்க்க அந்தந்த ஊராட்சிகளில் கடந்த அ.தி.மு.க.,. ஆட்சியில் இ சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டு குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு இ.சேவை அளிக்க தீர்மானித்து ஊராட்சிகள் தோறும் இ சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டது.காலப்போக்கில் இந்த கட்டடங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல் ஆங்காங்கே காட்சி பொருளாக மாறிவிட்டது.பல கட்டடங்கள் சேதமடைந்து சிதலமடைந்து வரும் நிலையில் போத்தி ரெட்டி பட்டியில் இ சேவை மைய கட்டடத்தை ஆடுகள் வளர்க்கும் கொட்டகையாக மாற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் அரசின் நிதி வீணாவதோடு நோக்கமும் நிறைவேறாமல் போகும் நிலை உள்ளது. இ சேவை மைய கட்டடங்களை ஊராட்சிகள் தோறும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை