உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை

திருத்தங்கலில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் வாறுகால் துார்வாருதல், குப்பை சேகரித்தல் போன்ற சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது. சிவகாசி மாநகராட்சியின் முதல் 24 வார்டுகள் திருத்தங்கல் பகுதியில் உள்ளன. இந்தவார்டுகளில் 152 தெருக்கள் உள்ளன. திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது 2011ல் எடுத்த மக்கள் தொகை கணக்கின்படி 55 ஆயிரம் பேர் வசித்தனர். இந்த மக்கள் தொகையின் படி இங்கு 227 துாய்மை பணியாளர்கள் பணி புரிய வேண்டும். ஆனால் அப்போதே 20 நிரந்தர துாய்மை பணியாளர்களும், 50 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். இதனால் வாறுகால் துார்வாருதல், குப்பை சேகரித்தல் போன்ற துாய்மை பணியை மேற்கொள்வதற்கு சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது திருத்தங்கலில் 75 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். ஆனால் இப்போதும் குறைந்த அளவு துாய்மை பணியாளர்கள் பணி புரிகின்றனர் இதனால் வழக்கம் போலவே சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகின்றது. பெரும்பான்மையான தெருக்களில் இரு மாதத்திற்கு ஒருமுறைதான் வாறுகால் துார்வாரப்படுகின்றது.மேலும் குப்பை சேகரிக்க வழி இல்லாமல் ரோட்டில் ஆங்காங்கே கொட்டப்படுகின்றது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகின்றது. எனவே திருத்தங்கலில் கூடுதல் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப் பணியை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை