உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு

குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு

ராஜபாளையம்: குப்பை, கட்டட இடிபாடுகள் கொட்டுவதால் சுருங்கிய நீர்பரப்பு, ஆகாய தாமரை, கழிவுநீர் கலக்கம் போன்றவைகளால் கொண்டனேரி கண்மாய் பாசன விவசாயிகள் திணறி வருகின்றனர்.ராஜபாளையம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கொண்டனேரி கண்மாய் 112 ஏக்கர் பாசன பரப்புடன் உள்ளது. ஆண்டாண்டு காலமாக நகர்பகுதிக்கு நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீருக்கு முக்கிய பங்கு வகித்து வந்தது. நாளடைவில் குடியிருப்புகளின் கழிவு நீர் கலக்கும் இடமாக மாறியதால் உபயோகிக்க முடியாத தன்மை அடைந்து விட்டது.இதனால் பாசனத்திற்கான மண்வளமும் பாதிக்கப்பட்டு விளையும் நெல்லும் தரம் குறைந்து விட்டது. நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் செயலை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்காததால் இதே நிலை தொடர்கிறது. நகராட்சி அருகே குடியிருப்பு ஒட்டியுள்ளதால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, கட்டட கழிவுகள், குப்பை கொட்டி சுருங்கியும், குடியிருப்பு கழிவு நீர் கலப்பால் ஆகாய தாமரை முட்கள் படர்ந்தும் காணப்படுகிறது.நீர் தேங்கும் இடமும் வெளியேறும் இடமும் மண்மேவி சமமாகிவிட்டது. நீண்ட காலமாக கண்மாய் துார் வாராமல் வைத்துள்ளதுடன் தனியார் பங்களிப்புடன் கண்மாயை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்னும் தொடங்காமல் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை