உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பள்ளியில் பாம்பு: மாணவர்கள் அச்சம்

 பள்ளியில் பாம்பு: மாணவர்கள் அச்சம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வடக்கு தெரு ஊராட்சி துவக்க பள்ளியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பள்ளியை சுற்றியுள்ள தெருக்களைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. பள்ளியின் பின் பகுதியில் நீர் வரத்து ஓடைகள் இருப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அவ்வப்போது காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று வகுப்பறையில் புகுந்து விட்டது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் பாம்பை அடித்து வெளியேற்றினர். எனவே, பள்ளியை சுற்றியுள்ள சுகாதாரக் கேடுகளை அகற்றியும், நீர்வரத்து ஓடைப்பகுதியில் இருந்து பாம்புகள் வராத நிலையை ஏற்படுத்தவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை