சோலார் பேட்டரி எரிந்து வீடு நாசம்
நரிக்குடி : நரிக்குடி அ.முக்குளத்தில் பசுமை வீட்டில் இருந்த சோலார் பேட்டரி தீப்பற்றி, வீடு எரிந்து நாசமானது. நரிக்குடி அ. முக்குளத்தில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் முருகன் வீடு கட்டினார். மானியத்தில் வீட்டில் சோலார் பொருத்தினார். நேற்று முருகன் வேலைக்கு சென்றார். மனைவி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார். மாலை பேட்டரியில் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து, வீட்டில் இருந்த டி.வி, பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின.