நடப்பாண்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட வழக்குகள் எஸ்.பி., கண்ணன் தகவல்
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்ட விவ ரங்கள் குறித்து எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 2025 ஜன. 1 முதல் ஆக. 12 வரை 13 கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 18 பேரில் 16 பேருக்கு ஆயுள், ஒருவருக்கு 10 ஆண்டுகள், ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதே போல ஒரு ஆதாய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள், 4 கொள்ளை வழக்கில் 7 பேருக்கு ஒன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, வாகன விபத்தில் சம் பந்தப்பட்ட ஒருவருக்கு 4.5 ஆண்டுகள் சிறை, 2 கற்பழிப்பு வழக்கில் ஒருவருக்கு ஆயுள், மற்றொருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 11 போக்சோ வழக்குகளில் 13 பேரில் 10 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை, 3 சிறுவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனை யும், 5 கொலை முயற்சி வழக்கில் 8 பேருக்கு ஒன்று முதல் 7 ஆண்டுகள் வரை சிறை, 24 போதைப் பொருள் வழக்கில் 23 பேருக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் அபராதம், ஒரு வருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1.20 லட்சம் அபராதம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் 7 வழக்கில் 7 பேருக்கு சிறை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 9 வழக்கில் 16 பேருக்கு சிறை, கடுங்காவல் சிறை தண்டனையும், பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என விருதுநகர் எஸ்.பி., கண்ணன் தெரிவித்துள்ளார்.