உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாணக்யா குரு யுடியூப் சேனல் சார்பில் மாதங்களில் மார்கழி விழாவின் இரண்டாம் நாளான நேற்று, ஆன்மிக சொற்பொழிவு, சேனல் நிர்வாகி ரங்கராஜ் பாண்டே தலைமையில் நடந்தது.விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் டி.ஏ.ஜோசப் பேசியதாவது; இந்து மதம் ஈ, எறும்பிற்கு கூட இரக்கம் காட்டும் மாதம். இன்று சமுதாயத்தில் ஆண் ஆதிக்கம் உள்ளதை மறுக்கவில்லை. ஆனால், பெண்களின் நன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இது ஏற்படுத்தப்பட்டது.மனித இனத்தின் சரிபாதியாக பெண் இனத்திற்கு பெருமையை தந்த இந்துமதம், பெண்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்துவதை போதித்து இருக்குமா. கிடையாது. ஆண்டாளின் காதல் ஒரு பக்தி காதல் ஆகும்.-என பேசினார்.நிறைவு நாளான இன்று (டிச.22) மாலை 6:30 மணிக்கு மணிகண்டனின் பட்டி மன்றம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை