உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேது கல்லுாரியில் விளையாட்டு விழா

சேது கல்லுாரியில் விளையாட்டு விழா

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 31 வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கண்ணன் எஸ்.பி., அர்ஜூனா விருது பெற்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா போட்டியை துவக்கி வைத்தனர். முன்னாள் மாணவர் அரிஸ்டோ லோகநாதன் பேசினார். போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பச்சை அணி 52 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. சிறந்த வீரராக ஜீவா, வீராங்கனையாக திவ்யபாரதி தேர்வு செய்யப்பட்டனர். உடற்பயிற்சி ஆசிரியர் சிவகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பிஸிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை